திருச்சி அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது

0 431
Stalin trichy visit

திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு நேற்று முன்தினம் வயிற்று வலி ஏற்பட்டது. உடனே அவரது பெற்றோர்கள் அந்த சிறுமியை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அந்த சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் கர்ப்பம் அடைந்துள்ளதாகவும், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர். உடனடியாக அந்த சிறுமிக்கு பிரசவம் பார்க்கப்பட்டது.


பின்னர் சிறிது நேரத்தில் அந்த சிறுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த சிறுமிக்கு 15 வயது என்பதால் டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை அலுவலர்கள் அரசு மருத்துவமனை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த சிறுமி அதே பகுதியை சேர்ந்த மகேஸ்வரன்(26) என்பவரை பெற்றோர்களுக்கு தெரியாமல் காதலித்து வந்துள்ளார். மேலும் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்து தற்போது அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது. அந்த சிறுமிக்கு 15 வயது என்பதால் அந்த வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் பற்றி தகவல் தெரிந்த மகேஸ்வரன் தலைமறைவாகிவிட்டார். இதை தொடர்ந்து கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீசார் மகேஸ்வரனை வலை வீசி தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.