சொத்து பிரச்சனையில் அண்ணனை வெட்டிக் கொலை செய்த தம்பி கைது

0 328
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 12  திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் இவருக்கு கிருஷ்ணமூர்த்தி (வயது 57),  சந்திரசேகர் (வயது 49),  சுப நந்தினி என இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இதில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு ஏக்கர் நிலம் பிரித்ததில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கிருஷ்ணமூர்த்தி சந்திரசேகரை கடந்த 2020 ஆம் ஆண்டு தாக்கியதாக கூறப்படுகிறது இதன் காரணமாக கிருஷ்ணமூர்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கிருஷ்ணமூர்த்தி சிறைக்குச் சென்றதாகவும் இந்த சம்பவத்திலிருந்து இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை 7 ஏழு மணி அளவில் கிருஷ்ணமூர்த்தி வயல்காட்டில் இருந்து பால் கேனுடன் இருசக்கர வாகனத்தில் நாயுடு தெரு பகுதிக்கு வரும் பொழுது அவரது சகோதரர் சந்திரசேகர் வழிமறித்து கிருஷ்ணமூர்த்தி தலை மற்றும் கையில் வெட்டி உள்ளார்.

இதில் கிருஷ்ணமூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். உயிரிழந்த கிருஷ்ணமூர்த்தி அருகிலேயே சந்திரசேகர் அமர்ந்திருந்து உள்ளார் அதன் பின்னர் துறையூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சந்திரசேகரை கைது செய்த  போது அவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து சந்திரசேகரை துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து உயிரிழந்த கிருஷ்ணமூர்த்தியின் மனைவி கலைச்செல்வி அளித்த புகார் அடிப்படையில் துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு ஏக்கர் நிலத்திற்காக சொந்த அண்ணனை அருவாளால் வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave A Reply

Your email address will not be published.