முதியவரை தாக்கி பணம் பறித்தவர்கள் கைது
திருச்சி, ஏப்.10 திருச்சி பாலக்கரை உதயன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 65) இவர் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு தனியார் லாரி ஷெட்டில் அக்கவுண்டன்ட்டாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் அவர் காந்தி மார்க்கெட் சப்-ஜெயில் சாலையில் ஒருலாரி செட் அருகே நடந்து சென்றபோது 3 நபர்கள் அவரை வழிமறித்து கீழே தள்ளிவிட்டு அவர் வைத்திருந்த வசூல் பணமான 6 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்று மாயமாயினர். இது குறித்து விஸ்வநாதன் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் ஆய்வாளர் சிவராமனிடம் அளித்தார். புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்ட வடக்கு தாராநல்லூர் பகுதியை சேர்ந்த தர்மதுரை (20), EB ரோடு பகுதியை சேர்ந்த அண்ணாமலை(21) மற்றும் வால்டின் ஜோசப் (17) ஆகிய மூன்று பேரை காந்தி மார்க்கெட் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.