ஆறுநாட்டு வேளாளர் தலைமை சங்கம் சார்பில் முப்பெரும் விழா
திருச்சி, ஆக.26- ஆறுநாட்டு வேளாளர் தலைமை சங்கம் சார்பில் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள், வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர்கள் மற்றம் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் பாராட்டு விழா திருவானைக்காவல் ஆறுநாட்டு வேளாளர் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. தலைமை சங்க தலைவர் செல்வராஜ்பிள்ளை தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக சென்னை பூந்தமல்லி கோல்டன்டெக்ஸ் மணிப்பிள்ளை, துறையூர் ஆறுநாட்டு வேளாளர் சங்க சங்கம் கவுரவ தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஆறுநாட்டு வேளாளர் அன்னதான அறக்கட்டளை செயலாளர் மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
இதில் திருச்சி மாவட்ட ஊராட்சி தலைவர் தர்மன் ராஜேந்திரன், தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சர்மிளா பிரபாகரன் உள்பட வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த 96 பேருக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. விழாவில் சங்க துணைத்தலைவர் புரவி, சென்னை ஆறுநாட்டு வேளாளர் சங்க தலைவர் வீரக்குமார், துறையூர் சங்க கவுரவ ஆலோசகர் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தலைமை சங்க செயலாளர் சதீஸ்வரன் வரவேற்றார். முடிவில் பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.