புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தவர் கைது
திருச்சி அக் 15 திருச்சி கருமண்டபம் ஜெ. ஆர்.எஸ்.நகர் பகுதியில் ஒரு வாலிபர் கஞ்சா விற்றுக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த கே.கே. நகர் ஐயப்பன் நகரை சேர்ந்த பிரசன்னா (வயது 25) என்பவரை செசன்ஸ் கோர்ட் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 40 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து செசன்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரசன்னாவை கைது செய்து ஜாமீனில் விடுதலை செய்தனர்.