சாலையில் இறங்கிய பயிற்சி விமானம்

0 114
Stalin trichy visit

திருச்சி,நவ.13 சேலத்தில் இருந்து இன்று மதியம் விமானம் புறப்பட்டு சென்றது. திருச்சி- புதுக்கோட்டை சாலையில் நார்த்தாமலை அருகே  அந்த விமானம் சென்றது. அப்போது திடீரென்று அந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானிகள்   நார்த்தாமலை அம்மாசத்திர பகுதி பைபாஸ் ரோட்டில்  தரை இறக்கினர். தரையிறக்கும் போது சாலையில் வாகனங்கள் எதுவும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதில் விமானிகள் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. திடீரென்று சாலையில் விமானம் தரை இறங்கியதால் பரபரப்பு உண்டானது. காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.