திருச்சி காவேரி மருத்துவமனையில் யானைக்கால் நோய் சிகிச்சை – மண்டல மறு இணைப்பு சிகிச்சை மையங்கள்
திருச்சி, ஜூலை 16 திருச்சி காவேரி மருத்துவ மனையில் யானை கால் வியாதி சிகிச்சை மற்றும் மண்டல மறு இணைப்பு சிகிச்சை மையங்கள் தொடக்கம்
திருச்சி காவேரி மருத்துவமனையில் யானை கால் வியாதி சிகிச்சை மற்றும் மண்டல மறு இணைப்பு சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டது.
காவேரி மருத்துவமனை இணை இயக்குனர் செங்குட்டுவன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் காவேரி மருத்துவமனை பிளாஸ்டிக் சர்ஜரி துறை தலைவர் ஸ்கந்தா, சென்னை எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லுாரி இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நிருபர்களிடம் கூறியது:
திருச்சி காவேரி மருத்துவமனையில் யானைக் கால் வியாதிக்கான ( லிம்பெடிமா) சிகிச்சை பிரிவு, மண்டல மறு இணைப்பு சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டிருப்பதால் மக்கள் இதற்கான சிகிச்சை பெறுவதற்கு சென்னை போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டியது இல்லை. கடந்த ஒரு மாதத்தில் தொடர்ச்சியாக துண்டிக்கப்பட்ட கைகளை மறு இணைத்தல் (Replantation) எனும் நுண் அறுவை சிகிச்சை 3 பேருக்கு வெற்றிகரமாக செய்யப்பட்டது. விபத்து மூலம் உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டால் அந்த உறுப்பை மீண்டும் பொருத்துவதற்கு மறு இணைத்தல் என்றும், இறந்தவர்களிடமிருந்து பெறப்பட்டு நோயாளிக்கு இணைப்பது உடல் மாற்று உறுப்பு சிகிச்சை என அழைக்கப்படுகிறது. மனித முடியை விட மெல்லியதாக இருக்கும் துண்டிக்கப்பட்ட ரத்த நாளங்கள், எலும்புகள், நரம்பு சிறப்பு நுண்ணோக்கியை ( ஜீஸ் டிவாடோ ) பயன்படுத்தி இணைக்கப்பட்டது.
அதேபோல லிம்பெடிமா எனும் யானை கால் வியாதி பாதிக்கப்பட்டவர்களுக்கும் கால் வீக்கம் குறைவதற்காக சிகிச்சை அதன் பாதிப்புகளை கட்டுப்பாட்டில் வைக்கும் சூப்பர் மிக்ரோ அறுவை சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது.
மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூலை 15ம் தேதி தேசிய பிளாஸ்டிக் அறுவை தின நிகழ்ச்சிகள் நடக்கிறது. திருச்சி காவேரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி – சூப்பர் ஸ்பெசாலிட்டி குறித்த கல்வி (DNB)கற்பிக்கப்படுகிறது. திங்கள் முதல் சனி வரையிலும் யானை கால் வியாதி சிகிச்சையும், அனைத்து நாட்களும் மண்டல மறு இணைப்பு சிகிச்சை மையங்கள் செயல்படுகிறது. திருச்சி காவேரி மருத்துவமனையில் அனுபவம் வாய்ந்த டாக்டர்கள், சிறந்த உள் கட்டமைப்பு வசதிகள் இருப்பதால் சவால்கள் நிறைந்த சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்படுகிறது என்றனர்.
நிகழ்ச்சியில் பிளாஸ்டிக் சர்ஜரி துறை ஆலோசகர் முரளிதர்ஷன், மருத்துவ நிர்வாகி ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.