காவிரி ஆற்றில் மணல் அள்ளிய இருவர் கைது

0 218
Stalin trichy visit

திருச்சி ஏப்.10 திருச்சி -சென்னை பைபாஸ் சாலை கல்லணை ரோடு திருவரங்கம் பகுதி காவிரி ஆற்றின் முட்புதர் பகுதியில் மணல் அள்ளி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான போலீசார் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர். அப்போது பொலிரோ பிக்-அப் வாகனத்தில் மணல் அள்ளி சென்ற திருவானைக்காவல் திம்மராயசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த தருண்குமார், பரணி ஆகிய இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர் . மேலும் மணல் அள்ளுவதற்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.