தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு இரண்டுநாள் பயிற்சி தொடக்கம்

0 183
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 3 திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நியமனம் செய்யப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான இரண்டுநாள் பயிற்சி இன்றும் நாளையும் (மார்ச் 3,4) சாரநாதன் பொறியியல் கல்லூரியில் இன்று தொடங்கியது.

இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, எதிர்வரும் சட்டமன்ற தேர்தல், 2026 இன் முன்னேற்பாடாக, இன்றும் நாளையும் (மார்ச்3, 4 ஆகிய தேதிகளில்) இரண்டு நாட்கள் திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய எட்டு மாவட்டங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான தொடர்பான பயிற்சிகள் திருச்சி மாவட்டம், சாரநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

பயிற்சியில் தேர்தல் நடத்தை விதிகள், வேட்புமனுக்கள் தாக்கல், வாக்குப்பதிவு நாளன்று செய்ய வேண்டிய பணிகள் உள்ளிட்ட முக்கியமான தேர்தல் பணிகள் தொடர்பாக மேற்கண்டுள்ள எட்டு மாவட்டங்களை சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது. முதல் நாளான இன்று பயிற்சியை திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வே.சரவணன் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி மற்றும் 8 மாவட்டங்களின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.