போலி பாஸ்போர்ட் வைத்திருந்த இரண்டு பேர் கைது
திருச்சி ஆக18 திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மலேசியா செல்வதற்காக பயணிகள் விமான நிலைய வளாகத்தில் நின்று கொண்ருந்தனர். அப்பொழுது இமிகிரேசன் அதிகாரிகள் பயணிகளின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தனர். அப்பொழுது ஒரு பெண்மணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தபோது அது போலி பாஸ்போர்ட் எனவும், அவர் இலங்கையை சேர்ந்தவர் என தெரிய வந்தது.
இதையடுத்து இமிகிரேசன் அதிகாரி கோமதி ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்ற குண்டூர் பகுதியை சேர்ந்த இலங்கை பெண்ணை போலீசார் கைது செய்து உள்ளனர்.
இதே போன்று திருச்சியில் இருந்து கோலாலம்பூருக்கு செல்ல முயன்ற விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சஞ்சீவி ராஜ் (வயது 46) என்ற பயணியின் பாஸ்போர்ட்டை வாங்கி சோதனை செய்தபோது அது போலி ஆவணங்களை கொண்டு தயார் செய்யப்பட்டது என தெரிய வந்தது.
இதையடுத்து இமிகிரேசன் அதிகாரி முகேஷ் ராம் கொடுத்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து சஞ்சீவி ராஜாவை கைது செய்து ஜாமினில் விடுதலை செய்தனர்.