மண்ணச்சநல்லூரில் வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி. பிறந்தநாள் விழா
திருச்சி, ஆக.17 விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் 62 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா முன்னிட்டு மண்ணச்சநல்லூர் கடைவீதியில் அக்கட்சியின் கொடி ஏற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனின் 62 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா முன்னிட்டு மண்ணச்சநல்லூர் கடைவீதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி ஏற்றம் நிகழ்ச்சி மண்ணச்சநல்லூர் நகர செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது . விழாவின் சிறப்பு விருந்தினர் அக்கட்சியின் திருச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் குரு அன்புச்செல்வன் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு மற்றும் பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.
பின்னர் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அக்கட்சியின் கோஷங்கள் எழுப்பி கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனுக்கு வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் மணி, மாவட்ட இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை அமைப்பாளர் ஆதித்யன், மாவட்ட விடுதலை இயக்க பொறுப்பாளர் விஜயா, அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட அமைப்பாளர் ஆசிரியர் கந்தசாமி, அரசு ஊழியர் ஐக்கிய பேரவை மாவட்ட தலைவர் பொன்னுச்சாமி, சுண்ணாமிருப்பு ஊராட்சி மன்ற தலைவரும் முன்னாள் ஒன்றிய செயலாளருமான மூர்த்தி, மணமேல்ப்பட்டி சந்திரன், சிங்கம்புணரி ஒன்றிய செயலாளர் சந்திரன், செல்லபாண்டியன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ரவி, ஒன்றிய பொறுப்பாளர் கணேசன், சுரேஷ், லெனின், ஒன்றிய துணைச் செயலாளர் காட்டாம்பூர் சேகர் மற்றும் கீழநிலை கிராம பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.