காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திடீர் தீ பற்றி எரிந்து நாசம் – போலீசார் விசாரணை
காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திடீர் தீ பற்றி எரிந்து நாசம் – போலீசார் விசாரணை
திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சாலை விபத்து சேதமடைந்த வாகனங்கள் மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்களில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சமயபுரம் புதிய பேருந்து நிலையம் பின்புறம் காலி இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.
இன்று மாலை திடீரென அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் திடீரென தீ பற்றி கரும்புகை வெளியானதை தொடர்ந்து அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் சமயபுரம் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சமயபுரம் தீயணைப்பு துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு விபத்தில் சேதம் அடைந்த பஸ் மற்றும் லாரி சிறிய ரக சரக்கு வாகனம் என மூன்று வாகனங்கள் தீயில் எரிந்து நாசமானது.
காவல்துறை கட்டுப்பாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஏலம் விடப்படுவது வழக்கம் இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்தீ பற்றி எரிந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.