நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்களால் மணக்கால் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்

0 88
Stalin trichy visit

திருச்சி, ஜன.6 நாளந்தா வேளாண்மைக் கல்லூரி மாணவர்களால் மணக்கால் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டாரம், மணக்கால் கிராமத்தில் பிரியதர்ஷினி கால்நடை மருத்துவர் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நாளந்த வேளாண்மை கல்லூரி மாணவர்களால் நடைபெற்றது.

இதில் பால் மாடுகள் மற்றும் கன்றுகளுக்கு கோமாரி நோய் (food and mouth disease) தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்த முகாமில் கால்நடை மருத்துவர்கள் மாடுகளின் உடல்நிலையை பரிசோதித்து தேவையான ஆலோசனையை விவசாயிகளுக்கு வழங்கினர் கோமாரி நோய் மாடுகளின் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் தொற்று நோயாக இருப்பதால் அதனை தடுக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தப்படுவது மிகவும் அவசியம் என மருத்துவர்கள் தெரிவித்தனர் மேலும் மாடுகளின் ஆரோக்கியம் பால் உற்பத்தி அதிகரித்து சுத்தமான பராமரிப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந்த முகாமில் கிராம மக்கள் ஆரோக்கியத்துடன் கலந்துகொண்டு பயந்து சென்னை கால்நடை மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்படுவதால் கால்நடைகளின் நலன் பாதுகாக்கப்பட்டு விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த முகமானது நாளந்த வேளாண்மை கல்லூரி மாணவர்கள் ச.வினோத், ஜா.சாம் குமார், ஜெ. சுரேந்தர், ச.சந்தோஷ், பு. சக்தி, க.ராஜேஷ் மற்றும் கோ.சதீஷ் ஆகியோர்களால் நாளந்த வேளாண்மை கல்லூரியின் தாளாளர்  அல்லி இங்கர்சால், முதல்வர் முனைவர். ஜெ. வெங்கடா பிரபு, முனைவர். பா. குணா இணைப் பேராசிரியர் துறைத் தலைவர் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர், ப.ரந்தகுமார் முதுநிலை உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர், ம.சுரேஷ் உதவி பேராசிரியர் மற்றும் குழு மேற்பார்வையாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக நடந்து முடிந்தது.

Leave A Reply

Your email address will not be published.