பெல் நிறுவனத்தில் தொமுச தொழிற்சங்க ஊழியர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்

0 144
Stalin trichy visit

திருச்சி, ஜன.7  மத்திய பொதுத்துறை நிறுவ னங்களில் ஒன்றான பெல் -நிறுவன தொழிற்சாலையில் தொமுச தொழிற்சங்க ஊழி யர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு

திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவ னம் உள்ளது. இந்த நிறுவ னத்தில் நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்வதற்கு தேவையான கட்டுமான பொருட்கள் அனைத்தும் தயாரிக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலையில் பல ஆயிரக்கணக்கான தொழி லாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இங்கு தயா ரிக்கப்படும் பொருட்கள் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நிறுவனங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதன்படி தான் பெல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட என்டிபிசி எனப்படும் உதிரி பாகம் தயாரிக்கப் பட்டு ஒரிசா மாநிலத்திற்கு உட்பட்ட தால்சர் பகுதிக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு லாரியில் ஏற்றி அனுப்பப் பட்டதாக கூறப்படுகிறது. அப்படி அனுப்பப்பட்ட என்டிபிசி உதிரி பாகம் 10 நாட்களுக்கு முன்பே சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு சென்று சேர்ந்திருக்க வேண்டும் என கூறப்படுகிறது. இன்று வரை சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு போய் சேரவில்லை

இந்நிலையில் என்டிபிசி ஜாப் ஏற்றப்பட்டவாகனம் பெல்வளாக பகுதியிலேயே 20 நாட்களாக நிறுத்தி வைக் கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இது பற்றி தொமுச சங்கத்தினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்ப டையில் அதன் பொதுச் செயலாளர் தீபன் தலை மையில் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தோடு பெல் நிர்வாகத்திற்கு எதிராக பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

இதனை தொடர்ந்து பெல் செயலான்மைய இயக்குனர் பிரபாகர். வணிகவியல் துறை மேலாளர் கிருஷ்ண குமார் ஆகியோர் தொமுச தொழிற்சங்க நிர்வாகிகளு டன் பேச்சு வார்த்தை நடத்தினர். பெல் நிறுவ னத்தில் இருந்து என் டி பி சி ஜாப் ஏற்றப்பட்ட லாரி அங்கு செல்லாததற்கு காரணம், அங்கு ஏற்கனவே சென்ற வாகனங்களில் இருந்து பொருட்கள் இறக்கி வைக்கப்படாமல் உள்ளது. இதனால் தேவையில்லாமல் அங்கு போய் நிற்க வேண்டும் என்பதால்தான் இங்கு நிறுத்தி வைக்கப்பட் டிருந்ததாக கூறப்பட்டது. இதுபோல் பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்கு இனி வரும் காலங்களில் பெல் நிறுவனத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு உதிரி பாகங்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத் தப்பட வேண்டும் எனக் கூறியதாக கூறப்படுகிறது.

இதற்கு பெல் நிர்வாகம் சம்பந்தப்பட்ட லாரி நிறுவன உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு தீர்வு காண்பதாக வும் அதே போல் இனிவரும் காலங்களில் இது போன்று பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து போராட்டம் விலகிக்கொள்ளப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.