சாலை வசதி கோரி வீடுகளில் கருப்பு கொடிகட்டி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

0 177
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 24  மணப்பாறை அருகே சாலை வசதி செய்து தரக்கோரி தேர்தல் புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ள மக்கள் வீடுகளில் கருப்பு கட்டினர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த , இனாம்புதுவாடி ஊராட்சிக்குட்பட்ட புதுவாடி மருத்துவர் காலணியில் சுமார் 35 குடியிருப்புகளும், 70 க்கும் மேற்பட்ட வாக்காளர்களும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பகுதிக்கு செல்ல முறையான சாலை வசதி என்பது கிடையாது. நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் கடந்தும் தனி தீவு போல் தான் இந்த கிராமம் காட்சி தருகின்றது. அவசர காலங்களில் கூட பாதிக்கப்பட்டவர்களை தோழில் சுமந்து கொண்டு செல்லும் நிலை உள்ளதால் மிகுந்த வேதனைக்கு ஆளாக வேண்டிய நிலை இருப்பதால் அடிப்படை தேவையான சாலை வசதி செய்து தந்திட வேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகள் முதல் முதல்வர் வரை பலமுறை பல ஆண்டுகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை சாலை வசதி செய்து தரவில்லை. இப்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் ஆத்திரம் அடைந்த மக்கள் வரும் தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்து அதற்கான விளம்பர பதாகை வைத்துள்ளனர். மேலும் தேர்தலன்று வாக்காளர் அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டைகளையும் ஒப்படைப்பதாக தெரிவித்துள்ளனர். இதே போல் இன்று காலை முதல் பலரும் தங்களின் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இதே போல் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றாத பட்சத்தில் கண்டிப்பாக தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்று தெரிவித்து உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.