பிஜேபி அணிக்கு வாக்களிக்க மாட்டோம் : தமிழ்நாடு விவசாய சங்கங்களில் கூட்டு இயக்கம் அறிவிப்பு
திருச்சி, மார்ச் 28 விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஆதரவு கொடுக்கும் கட்சிகளுக்கு ஆதரவளிப்பது என்றும் பிஜேபி அணிக்கு வாக்களிக்க மாட்டோம் என தமிழ்நாடு விவசாய சங்கங்களில் கூட்டு இயக்கம் அறிவிப்பு
தமிழ்நாடு விவசாய சங்கங்களில் கூட்டு இயக்கம் மாநில பொதுக்குழு மற்றும் கலந்தாய்வு கூட்டம் பழைய மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு காவிரி விவசாய சங்க நிர்வாகி, தனபால், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு கூட்டாக அளித்த பேட்டியில் …..
நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து விவசாய சங்கங்களில் ஒத்த கருத்தில் அடிப்படையில் விவசாயிகளுக்கு எதிராக விதை சட்டம், மரபணு மாற்று பயிரை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்துகொள்ளலாம் என்ற வகையில் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 100% வரியும், வெளிநாட்டிலிருந்து இருக்கும்போது செய்யும் வேளாண் பொருட்களுக்கு ஜீரோ வரியும் ஒத்துக்கொண்டிருக்கிற மத்திய அரசு, இலவச மின்சாரத்தை தடுக்கும் வகையில் தமிழகத்தில் இருக்கக்கூடிய 21 லட்சம் இலவச மின்சாரத்துக்கு எதிராக சட்டத்தை கொண்டுவருவதும், மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவுவிலை என்பதை மத்திய அரசு அறிவிக்க வேண்டும், அந்த விலை கட்டுப்படியாகாதநிலையில் மாநில அரசு தனது சொந்த நிதியிலிருந்து வழங்கவேண்டும் என்பது நடைமுறை. அந்த வகையில் மாநில அரசு கொடுக்கக்கூடாது என ஒன்றிய அரசு புதிய சட்டம் கொண்டுவருகிறது.
ஏற்கனவே விவசாயிகள் நலிவடைந்துள்ளனர், இறையாண்மை காக்கப்படாது. இறக்குமதி செய்யும் வேளாண்மை பொருட்களை வீழ்ச்சடைய செய்ய வேண்டும் என்ற வகையில் ஜீரோ வட்டி என்ற வகையில் உள்ளே வருவதற்கு மத்திய பிஜேபி அரசு அனுமதி கொடுத்திருப்பதை கண்டிக்கிறோம்.
பெரும்பான்மையான விவசாயிகளுக்கு யார் நன்மை செய்வார்கள், வேளாண்மை கூட்டுறவு கடன்களில் வட்டி தருவது யார் உட்பட 68கோரிக்கைகளை முன்வைத்து அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து வழங்க உள்ளோம். எந்த கட்சியில் எங்களது முழுமையாக ஆதரவை வழங்குமோ அந்தக் கட்சியை நாங்கள் ஆதரிப்போம் வாக்களிப்போம்.
அதேநேரம் பிஜேபி சார்ந்த அணிகளுக்கு வாக்களிக்க மாட்டோம் என தெரிவித்தார்.