சாதனைப் பெண்களுக்கு விருது: துணை மேயர் வழங்கினார்

0 434
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 9  உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு ஶ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சாதனைப் பெண்களுக்கு மாநகராட்சி துணை மேயர் திவ்யா கலந்து கொண்டு சாதனைப் பெண்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.

உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு திருச்சி திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உமன்ஸ் டெவலப்மெண்ட் சார்பில் உலக பெண்கள் தின விழா யுவதி 2024 என்ற தலைப்பில் கல்லூரி கூட்ட அரங்கில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் பிச்சைமணி வரவேற்புரை ஆற்றினார்.

விழாவை வுமன்ஸ் டெவலப்மென்ட் செல் டிபார்ட்மெண்ட் ஆப் சோசியல் வொர்க் ஹெட் சித்ரா தொடங்கி வைத்தார். கல்லூரி செயலாளர் மற்றும் கரஸ்பாண்டட் வெங்கடேஷ் தலைமை உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 7 பெண்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் கல்லூரி விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற 50 மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். அதேபோல் உலக பெண்கள் தினம் விழாவை முன்னிட்டு கல்லூரி ஆண் பேராசிரியர்கள் சார்பில் கல்லூரியில் தூய்மை பணி மேற்கொள்ளும் 30 பெண்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கி கௌரவித்தனர். இந்த உலக பெண்கள் தின விழாவில் கல்லூரி மாணவிகள் பேராசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.