உலக முதலீட்டாளர்கள் மாநாடு முன்னேற்ற கருத்தரங்கம்

0 286
Stalin trichy visit

திருச்சி, நவ. 29  உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 சென்னையில் வருகின்ற ஜனவரி 7மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெறுவதை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி கோர்ட் யார்ட், மாரியட் ஹோட்டலில் நேற்று (28.11.2023) நடைபெற்ற முன்னோட்ட கருத்தரங்கில்  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ,  தொழில்துறை அமைச்சர் டாக்டர்.டி.ஆர்.பி.ராஜா  முன்னிலையில் 15 நிறுவனங்களுடன் ரூபாய் 499 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில், தொழில் துறை அரசு செயலர் வி.அருண்ராய், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குநர் / தலைமை நிர்வாக அலுவலர்  விஷ்ணு, தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் மேலாண் இயக்குநர் செந்தில்ராஜ்,தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் திட்ட இயக்குநர் .கிருஷ்ணமூர்த்தி, இந்திய தொழில் கூட்டமைப்பின் திருச்சிராப்பள்ளி மண்டலத் தலைவர் கார்த்திகேயன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அ.செந்தில்குமார், தொழில் துறையினர், வணிகர்கள், தொழில் முனைவோர், தொழில் வல்லுநர்கள், முதலீட்டார்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.