உலக சாதனை படைத்த நெல்லை வாலிபருக்கு திருச்சியில் வரவேற்பு

0 215
Stalin trichy visit

கேரள மாநிலம் கொச்சியில் கடந்த மாதம் கைகளை மடக்கி விரல்களால் தண்டால் எடுக்கும் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெல்லை மாவட்டம் கடம்பூர் பகுதியைச் சேர்ந்த பிரேம்ஆனந்த் (வயது 29) இவர் திருச்சியில் தங்கி விளையாட்டு பயிற்சி எடுத்து கொண்டிருக்கிறார். இதில் பிரேம்ஆனந்த் கலந்துகொண்டு தனிநபர் உலக சாதனை படைத்தார். இதன் மூலம் `இந்தியன் புக் ஆப் ரெக்காட்ஸ்’ என்ற புத்தகத்தில் இவரது பெயர் இடம் பெற்றது. இந்நிலையில் அவர் நேற்று திருச்சி ரெயில் நிலையத்திற்கு வருகை தந்தார்.

அவரது உறவினர்கள் நண்பர்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர். இதில் பயிற்சியாளர் முனியாண்டி சமூக ஆர்வலர் தாமஸ் முன்னாள் தேசிய விளையாட்டு வீரர் கமல் ஆகியோர் கலந்து கொண்டனர் எனது வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது இதற்காக என்னுடைய பயிற்சியாளர் எனக்கு நன்கு உற்சாகம் அளித்தார். அவர் மூலமாகவே நான் இந்த சாதனை படைத்துள்ளேன்.

Leave A Reply

Your email address will not be published.