அதிமுக மாநகர் மாவட்ட மகளிர் அணி சார்பில் உலக மகளிர் தின விழா

0 124
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 9 திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட மகளிர் அணி சார்பில் தில்லை நகரில் உள்ள மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் இன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜே சீனிவாசன் தலைமையில் மாவட்ட மகளிர் அணி தலைவி ஆரோக்கிய மேரி, மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவிகள் புவனேஸ்வரி, சபீனா பேகம் மீரான், முன்னாள் அ.தி.மு.க. மகளிர் அணி மாவட்ட செயலாளர் தமிழரசி சுப்பையா, ஆகியோரது ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி மகளிர் தினத்தை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட துணை செயலாளர் வனிதா, பகுதி கழக செயலாளர்கள் ராஜேந்திரன், வாசுதேவன், எம் ஆர் ஆர் முஸ்தபா, நாகநாதர் பாண்டி, வெங்கட் பிரபு முன்னாள் மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் சுப்பையா பாண்டியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.