படுக்கையில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு
திருச்சி ஏப் 9 திருச்சி மாவட்டம் ஆங்கரை அருகில் உள்ள முள்ளிப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் அழகு மாலி (வயது 34) இவர் கடந்த பிப்ரவரி 22ந் தேதி துறையூரில் நடைபெற்ற விபத்தில் படுகாயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சையின் போது படுக்கையில் இருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். இதையடுத்து
மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 7 ந்தேதி சிகிச்சை பலனின்றி அழுகுமாலி பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் குறித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.