மியாவாக்கி அடர்வனக் குறுங்காடு உருவாக்க 8 ஏக்கர் பரப்பளவில் ஒரு லட்சம் மரக்கன்று நடும் விழா. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு துவக்கி் வைத்தார்.

0 735
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பல்லபுரம் ஊராட்சியில் மியாவாக்கி அடர்வனக் குறுங்காடு உருவாக்க 8 ஏக்கர் பரப்பளவில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் நடைப்பெற்றது.

 

தற்போது பெருகி வரும் காற்று மாசுபாட்டால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது.இந்நிலையில் சுத்தமான காற்றை சுவாசிக்கவும், காட்டில் நடைப்பயிற்சியை மேற்கொள்ளவும்,வரும் தலைமுறையை பாதுகாக்கவும் மியாவாக்கி அடர்வன குறுங்காடுகள் உருவாக்க ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 46 வகையான நாட்டு  மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க 8 ஏக்கர் பரப்பளவில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு  மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

Leave A Reply

Your email address will not be published.