ஸ்ரீரங்கம் தொகுதியில் 252 நடமாடும் வாகனங்களில் காய்கறி விற்பனை – அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகில் தோட்டக்கலைத்துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 252 நடமாடும் காய்கறி விற்பனை வாகனங்களை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் சிவராசு, எம்எல்.ஏ.க்கள் பழனியாண்டி, ஸ்டாலின் குமார், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் விமலா, முன்னாள் துணைமேயர் அன்பழகன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.