திருச்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் 101 ஆவது பிறந்த நாள் விழா

0 171
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 3முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கலைஞரின் திருவுருவ சிலைக்கு தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி தலைமையில், மாநகர செயலாளரரும் மாநகர மேயர் அன்பழகன் முன்னிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கே. என். அருண் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து பேரறிஞர் அண்ணாவின் திருவுருச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கழக கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்டத் துணை செயலாளர்கள், மண்டல குழு தலைவர்கள்,மாமன்ற உறுப்பினர்கள், மகளிர் அணி, தொண்டர் அணி, உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.