உத்தமர் கோயிலில் சித்திரை தேர்த் திருவிழா 11ம் நாள்

0 246
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள அருள்மிகு உத்தமர் கோயிலில் சித்திரை தேரோட்ட விழாவை முன்னிட்டு கடந்த 15 ந்தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தேர்த் திருவிழாவின் 11 ம் நாளில் புருஷோத்த பெருமாள் ஆளும் பல்லக்கில் திருவீதி உலா நடைப்பெற்றது.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள அருள்மிகு உத்தமர் கோயில் 108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்யதேச ஸ்தலமாகவும், திருமங்கையாழ்வரால் பாடல் பெற்ற இத்தலம் 108 திருப்பதிகளில் ஒன்றானதும் மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவிகளும் எழுந்தருளிய திருத்தலம் இந்தியாவிலேயே அருள்மிகு உத்தமர் கோயில் ஒன்றே ஆகும்.இக்கோயிலில்
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டுக்கான சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த 15 ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தேர்த் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்றது.முக்கிய நிகழ்வான சித்திரை தேரோட்ட விழா கடந்த 23 ந்தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில் தேர்த் திருவிழாவின் கடைசி நாளான 11 ம் நாளில் புருஷோத்த பெருமாள் ஆளும் பல்லக்கில் திருவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இத்துடன் தேர்த்திருவிழா நிறைவுபெற்றது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் தலைமையில் கோயில் பணியாளர்கள் கோயில் குருக்கள்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.