துறையூரில் 18 அடி விநாயகர் சிலை பறிமுதல்
திருச்சி, செப்.14 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு துறையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 75 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் துறையூர் நகராட்சிக்கு உட்பட்ட வடக்கு தெருவில், தமிழக அரசு அனுமதித்துள்ள 10 அடி உயரத்தைவிட உயரமாக, 18 அடியில் விநாயகர் சிலை வைத்ததாக கூறி, அந்த சிலையை அகற்றுவதற்காக துறையூர் தாசில்தார் சித்ரா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் பொதுமக்கள் திரண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைடுத்து அந்த சிலை பொக்லைன் எந்திரம் உதவியுடன் பறிமுதல் செய்யப்பட்டு துறையூர் தாலுகா அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது.