திருச்சியில் 2.2 கிலோ கஞ்சா பறிமுதல் – பெண் கைது
திருச்சி ஆக 11 திருச்சி திண்டுக்கல் – திருச்சி சாலையில் உள்ள புங்கனூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பின்புறம் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகக் தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் கவிதா மற்றும் போலீஸார் ஆகஸ்ட் 10 அன்று சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 2.200 கிலோ கஞ்சா வை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ1 லட்சத்து10 ஆயிரம் ஆகும். பிறகு போலீசார் திருவெறும்பூர் காந்தி நகரைச் சேர்ந்த மீனாட்சி (வயது33) என்ற பெண்ணைக் கைது செய்தனர்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சக்திவேல் மற்றும் புவனேஸ்வரி ஆகிய இருவரைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.