ஆட்டோ ஓட்டுநரை தாக்கியவர் மீது வழக்குப்பதிவு
திருச்சி, ஆக. 8 திருச்சி சங்கிலிண்டபுரம் எம்ஜிஆர் நகர் சேர்ந்தவர் கதிர்வேல் வயது 27 இவர் ஆட்டோ டிரைவர்.கடந்த ஆறாம் தேதி கதிர்வேல் ஆட்டோவுடன் சென்று சங்கிலாண்டபுரம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்றார் அப்பொழுது 3 வாலிபர்கள் ஆட்டோ அருகில் நின்று கொண்டிருந்தனர்.அப்பொழுது மூன்று பேர் சேர்ந்து ஆட்டோ டிரைவர் கதிர்வேலிடம் தகராறு செய்து ஆட்டோ கண்ணாடியை உடைத்துள்ளனர்.
சம்பவத்தில் ஆட்டோ டிரைவர் கதிர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது இந்த சம்பவம் குறித்து கதிர்வேல் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு வாலிபர்களை தேடி வருகின்றனர்.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுவனை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்துள்ளனர்.