மாமனாரை தாக்கிய மருமகன் உட்பட 2 கைது
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சங்குறிச்சி கிராமத்தில் குடும்பத் தகராறில் மாமனாரை தாக்கிய மருமகன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி, ஜன. 4 லால்குடி அருகே மேட்டுத்தச்சங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் 29 வயதான விக்னேஷ் குமார். அதேபோல் தச்சங்குறிச்சி சவேரியார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் 24 வயதான சேர்ந்த பிரான்சிஸ்கா.இவர்கள் இருவரும் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. பிரான்சிஸ்கா குடும்பத்தினருக்கும் விக்னேஷ் குடும்பத்தினருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் பிரான்சிஸ்கா பாட்டிக்கு நினைவு தினம் நடைபெற்றது. அப்போது கடந்த 2 ந்தேதி இரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் விக்னேஷ் குமார் மாமனாரை கட்டையால் தாக்கி பிரான்சிஸ்காவை திட்டியதாக கூறப்படுகிறது.மேலும் விக்னேஷ்குமார் அண்ணன் 32 வயதான பிரிட்டோகுமார் பாட்டிலை எடுத்து வீசி தாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பிரான்சிஸ்காவின் தந்தை லால்குடி அரசு மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து பிரான்சிஸ்கா காணக்கிளியநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காணக்கிளியநல்லூர் போலீசார் விக்னேஷ் குமார் மற்றும் பிரிட்டோ குமார் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் அவர்களை கைது செய்து லால்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.