மணப்பாறை அருகே கிணற்றுக்குள் தவறிவிழுந்த 2 காட்டெருமைகள் உயிரிழப்பு : 2 கன்றுகள் மீட்பு

0 17
Stalin trichy visit

திருச்சி, ஏப். 27  மணப்பாறை அருகே கிணற்றுக்குள் தவறிவிழுந்த 2 காட்டெருமைகள் உயிரிழப்பு : 2 கன்றுகள் மீட்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகே உள்ள காரைக்குளம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி 60 என்பவருக்கு சொந்தமான சுமார் 50 அடி ஆழமுள்ள விவசாய பாசன கிணற்றில் நேற்று இரவு அருகே உள்ள குமரிக்கட்டி, கருப்பு ரெட்டியபட்டி ஆகிய மலைப் பகுதியில் இருந்து சுமார் 15-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் உணவு மற்றும் தண்ணீருக்காக வயல் பகுதியில் வந்த போது எதிர்பாராத விதமாக நான்கு காட்டெருமைகள் தவறி விழுந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை தோட்டத்தின் உரிமையாளர் தண்ணீர் பாய்ச்சுவதற்காக வந்தபோது காட்டெருமைகள் தண்ணீரில் மிதப்பது தெரிய வந்தது. உடனடியாக மணப்பாறை வனத்துறையினருக்கும், துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தார். துவரங்குறிச்சி தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்கும் பணியில் ஈடுபட்ட போது அதில் இரண்டு காட்டெருமைகள் இறந்த நிலையிலும் இரண்டு காட்டெருமைகளும் உயிருடன் உயிருக்கு போராடி வந்ததும் தெரிய வந்தது . மேலும் கிணற்றுக்குள் ஆழம் அதிகமாக இருந்ததாலும் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்ததாலும் மீட்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது.

உடனடியாக வனத்துறையின் மாவட்ட வன அலுவலர் கிருத்திகா, வன பாதுகாவலர் காஞ்சனா , மணப்பாறை வன அலுவலர் மகேஸ்வரன், துவரங்குறிச்சி வன அலுவலர் சரவணகுமார் அனைவரும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது உயிருடன் இருந்த காட்டெருமைகளை மீட்பது சிரமம் அதிகளவு இருந்ததால் மதுரையில் இருந்து கலைவாணன் தலைமையில் ஆறு பேர் கொண்ட கால்நடை மருத்துவர்கள்
வரவழைக்கப்பட்டு மயக்க ஊசி செலுத்தப்பட்டு ராட்சத கிரேன் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் கயிற்றின் மூலம் உயிருடன் இருந்த இரண்டு ஆண் காட்டெருமைகளை மீட்டு வனப்பகுதிக்கு ள் பத்திரமாக விரட்டி விட்டனர்.

மேலும் உயிரிழந்த இரண்டு காட்டு எருமையை கிரேன் மூலம் மீட்டு காட்டெருமைகளுக்கு கால்நடை மருத்துவர் ரமேஷ் உடற்கூறாய்வு முடிக்கப்பட்டு கருப்பு ரெட்டியபட்டி வனப்பகுதியில் அருகே பள்ளம் தோன்றி புதைக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு மணப்பாறை வட்டாட்சியர் சுந்தரபாண்டி , புத்தாநத்தம் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் காவலர்கள், வனத்துறை பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.