ஜோசப் கண் மருத்துவமனை சார்பில் 2 நாள் கண்காட்சி: அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
திருச்சி மே 31 திருச்சி ரோட்டரி மாவட்டம் 3000 திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, ரோட்டரி கிளப் ஆப் திருச்சி பட்டர்பிளைஸ் இணைந்து நடத்தும் ரோட்டோ எக்ஸ்போ 2024 திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று தொடங்கியது.இந்த கண்காட்சி நாளையும், நாளை மறுநாளும் தொடர்ந்து நடக்கிறது.கண்காட்சியை அமைச்சர் கே.என்.நேரு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் திருச்சிமாநகராட்சி மேயர் மு.அன்பழகன்,மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி,தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு, திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பிரதீபா , ஜோசப் கண் மருத்துவமனை நிர்வாக அதிகாரி சுபா பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.கவர்னர் ஆனந்த ஜோதி மற்றும் ரோட்டரி சங்கத் மற்றும் வருங்கால ரோட்டரி கவர்னர்கள் ராஜா கோவிந்தசாமி 2024 -2025 ஜே கார்த்திக் 2025 முதல் 2026 ஆர்.பி.எஸ் மணி , 2026 முதல் 2027 வரை ரொட்டேரியன் மின்னல் சரவணன் ரொட்டேரியன் எஸ் பி சுப்பிரமணியன் மற்றும் ரொட்டேரியன் பர்ஸானா ரொட்டேரியன் கேசவன் மற்றும் ரொட்டேரியன் முகமது தாஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர் இந்த எக்ஸ்போவின் முக்கிய நிகழ்வாக அரசு பள்ளியில் பெண்களுக்கு கழிப்பறை கட்டும் நோக்கத்தின் நிதி திரட்டும் முயற்சியில் ரோட்டரி சங்கமும் ஜோசப் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்தினர் .இந்த எக்ஸ்போ ஜூன் 2-ந் தேதி வரை நடக்கிறது.