மது பாட்டில்கள் கடன் கொடுக்க மறுத்த விற்பனையாளரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 2 பேர் கைது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் மது பாட்டில்கள் கடன் கொடுக்க மறுத்த விற்பனையாளரை அரிவளால் வெட்டிய வழக்கில் 2 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
சமயபுரம் நால்ரோடு பகுதியில் இரண்டு அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகிறது.இதில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் மண்ணச்சநல்லூர் அருகேஅய்யம்பாளையம் தெற்குமேடு பகுதியைச் சேர்ந்த 47 வயதான நாகராஜன் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். விற்பனையாளராக 42 வயதான பாலகிருஷ்ணன் குமார் மற்றும் கமல் ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6 ம் தேதி இரவு அரசு மதுபான கடையில் மதுபானம் வாங்க ஏராளமானோர் வந்திருந்தனர். அப்போது மோட்டார் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல் மதுபாட்டில்களை கடன் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.இதற்கு விற்பனையாளர் பாலகிருஷ்ணன் கடன் கொடுக்க மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் பீர்பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களைப் பிடிக்க கடையில் இருந்து வெளியே வந்த போது அவர்கள் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த அரிவாளால் பாலகிருஷ்ணனை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.காயம்பட்ட பாலகிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம அவர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று சமயபுரம் அருகே அக்கரைப்பட்டி சாலையில் நின்று கொண்டிருந்த சமயபுரம் சோலை நகரை சேர்ந்த 22 வயதான ஷாம் சுந்தர், இனாம்சமயபுரம் வேட்டைக்கார தெருவைச் சேர்ந்த 24 வயதான சந்திரசேகர் ஆகியோரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் இவர்கள் டாஸ்மாக் விற்பனையாளரை அரிவாளால் வெட்டியவர்கள் என தெரியவந்தது.இதனையடுத்து இரண்டு பேரையும் சமயபுரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.