பணம் கேட்டு மிரட்டிய 2 ரவுடிகள் கைது

0 161
Stalin trichy visit

 திருச்சி ஜன. 17 திருச்சி அரியாவூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் விஜய் ( வயது57 )
இவர் கோட்டை அண்ணா சிலை அருகே நேற்று நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த மர்ம நபர் கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டுள்ளார் .இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து மேல. சிந்தாமணி மிடில் தெருவைச் சேர்ந்த ரவுடி விஜயை (வயது25) கோட்டை போலீசார் கைது செய்தனர்.
இதேபோன்று உறையூர் முஸ்லிம் தெருவை சேர்ந்தவர் இப்ராகிம் (வயது50). இவர்
உறையூர் நவாப் தோட்டம் அருகே பழம் விற்பனை செய்து வருகிறார். இந் நிலையில் அங்கு வந்த மர்ம நபர் கத்தியை காட்டி   ரூ. 500 பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து புத்தூர் விபிஎன் தெருவை சேர்ந்த ரவுடி தனபால் (வயது 28 ) உறையூர் போலீசார் கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.