மலேசியாவில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் வந்த பயணி கைது

0 80
Stalin trichy visit

திருச்சி. ஜன.17 திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த10 ந் தேதி மலேசியாவில் இருந்து வந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு திரும்பிய புதுக்கோட்டை ஆலங்குடி பாலையூர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் (வயது57) என்பவரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து பாஸ்போர்ட் பெற்றது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை ஏர்போர்ட் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் ஜாமினில் விடுவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.