பாலியல் தொல்லை கொடுத்த 62 வயது ஆண் அடித்துக் கொலை

0 393
Stalin trichy visit

திருச்சி, டிச. 8 புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் விவேகாநந்தா நகரைச் சேர்ந்த சங்கர் மனைவி செல்வி(46) இவர் மண்டையூரில் உள்ள மகாலட்சுமி என்பவரது வீட்டில் கடந்த 5 மாத்திற்கு முன் வீட்டு வேலைக்கு சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் அந்த காம்பவுண்டில் இருக்கும் மற்றொரு வீட்டில் கடலூர் மாவட்டம் பெண்ணடத்தைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் வீராச்சாமி(எ) டேனியல்(62) வாடகைதாரராக குடியிருந்து வந்துள்ளார். இந்த நிலையில் செல்வி மீது காம வெறிகொண்டு அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார் இதில் ஒரு கட்டத்தில் தன்னுடன் உல்லாசத்திற்கு வருமாறு அழைத்துள்ளார் அவர் மறுக்கவே அடிக்கடி தொட்டு தொட்டு பேசி தொந்தரவு செய்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத செல்வி விரக்தியில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் இன்று  அதிகாலை வீராச்சாமி செல்வியுடன் தவறாக நடக்க முயற்சித்துள்ளார் இதில் ஆத்திரமடைந்த செல்வி வீட்டின் அருகில் கிடந்த இருசக்கர வாகனத்தின் செயின் மாட்டும் பல் சக்கரத்தை எடுத்து தலையில் கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த வீராசாமி நிகழ்வு இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிர் இழந்தார்.

தகவலறிந்த மண்டையூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து செல்வியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.