திருவெறும்பூர் அருகே 224 கிலோ குட்கா பறிமுதல் : இருவர் கைது
திருச்சி, மார்ச் 5 திருவெறும்பூர் அருகே சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 224 கிலோகுட்கா பொருட்களை துவாக்குடி போலீசார் கைப்பற்றியதோடு இரண்டு பேரை கைது
திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக துவாக்குடி காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின் படி துவாக்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் தலைமையில் துவாக்குடி, வாழவந்தான்கோட்டை மற்றும் அசூர் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், அசூர், பூசாரி தெருவில் உள்ள மளிகை கடையில் சோதனை செய்த போது கடையின் உரிமையாளரான ஜெகதீஸ்வரன்(52) என்பவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாகவும், கடைக்குள் இருந்த சாக்கு மூட்டையை பிரித்து சோதனை செய்தபோது சுமார் 7.8 கிலோ மதிப்பிலான ஹான்ஸ் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டது. மேற்படி நபரிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர் மேற்படி குட்காவை திருச்சி வயலூர் ரோடு, அம்மையப்பா நகர் பகுதியை சேர்ந்த ஜமால் முகமது (62) என்பவரிடமிருந்து வாங்கியதாக கூறியதன் பேரில் துவாக்குடி இன்ஸ்பெக்டர் கமலஹாசன் தலைமையில் ஜமால் முகமது என்பவரது வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியதில் சட்ட விரோதமான விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 208.5 கிலோ மதிப்பிலான குட்கா பொருட்கள் கைப்பற்றியதோடு ஜமால் முகமதுவை கைது செய்தனர் அதன் அடிப்படையில்
ஜெகதீஸ்வரன் மற்றும் ஜமால் முகமது ஆகிய இருவரையும் திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்
சட்டவிரோத விற்பனைக்காக வைத்திருந்த குட்காவை கைப்பற்றிய துவாக்குடி இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் இருவரையும் திருச்சி எஸ்பி செல்வ நாகரத்தினம் பாராட்டியுள்ளார்.