ஹிந்தி எழுத்துக்கள் அகற்றம் : எதிர்ப்புக்கு பணிந்தது ரயில்வே நிர்வாகம்

0 109
Stalin trichy visit

திருச்சி, மார்ச் 4  திருச்சி கோட்ட ரயில்வே அலுவலகத்தின் புதிய நுழைவு வாயிலில் ஹிந்தி வைத்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் தி.மு.க. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் எதிர்ப்புகளுக்கு பணிந்து ஹிந்தி எழுத்துகளை ரயில்வே நிர்வாகம் அகற்றியது.

திருச்சி கோட்ட ரயில்வே அலுவலகத்தின் புதிய நுழைவு வாயிலில் ஹிந்தி வைத்திருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் தி.மு.க. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் எதிர்ப்புகளுக்கு பணிந்து ஹிந்தி எழுத்துகளை ரயில்வே நிர்வாகம் அகற்றியது.

திருச்சி தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்ட மேலாளர் அலுவலகத்தின் புதிய நுழைவு வாயிலில் ஹிந்தி எழுத்துக்கள் எழுதப்பட்டு, தமிழ் எழுத்துக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறி திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஹிந்தி எழுத்துக்கள் எழுதப்பட்டு இருப்பதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போது ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் இருந்த ஹிந்தி எழுத்துக்கள் அகற்றப்பட்டது. ரயில்வே துறையை சேர்ந்த அதிகாரிகள் ஊழியர்கள் நுழைவு வாயில் முன்பு இருந்த ஹிந்தி எழுத்துக்களையும் அகற்றியது.

Leave A Reply

Your email address will not be published.