சேவல் சண்டை நடத்திய 3 பேர் கைது

0 181
Stalin trichy visit

திருச்சி, அக்.28 திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட, பண்ணப்பட்டி கிராமம் செட்டியப்பட்டியில் சேவல் சண்டை நடத்துவதாக வையம்பட்டி காவல்துறைக்கு கிடைத்தது. தகவலின்பேரில் நேற்று காவல் உதவி ஆய்வாளர் மாதேஷ் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

அப் போது செட்டியப்பட்டியில் உள்ள ஒரு காட்டுக்குள் கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த காணியாளம்பட்டியை சேர்ந்தகாளிமுத்து மகன் பிரபாகரன்(28), வையம்பட்டி வெள்ளாளப்பட்டியை சேர்ந்த வெள்ளையன் மகன்கள் கண்ணுச்சாமி (33), ராஜபாண்டி(30) ஆகியோர் மேலும் சிலருடன் சேர்ந்து சேவல் சண்டை நடத்திக் கொண்டிருந்தது தெரிந்தது. ரோந்து சென்ற காவல்துறையினரை கண்டதும் மற்றவர்கள் தப்பி ஓடிய நிலையில், 3 நபர்களை காவல் நிலையம் அழைத்து வந்து வையம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிந்து கைது செய்தனர். விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 3 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.