மணப்பாறை அருகே புதிதாக கட்டப்பட்ட 4 சமுதாயக்கூடங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
மணப்பாறை அருகே ரூ.44 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட 4 சமுதாயக்கூடங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு.
மக்களையே திறந்து வைக்கச் செய்த ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி
திருச்சி மாவட்டம், மணப்பாறை ஒன்றியப்பகுதியில் உள்ள கே.பெரியபட்டி, சமுத்திரம், தொப்பம்பட்டி ஆகிய ஊராட்சிகளில் உள்ள 4 இடங்களில் தலா ரூ.11 லட்சம் மதிப்பில் புதிதாக சமுதாயக்கூடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அதற்கான திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி கலந்து கொண்டு அப்பகுதி பொதுமக்களை வைத்தே புதிய கட்டிடங்களை ரிப்பன் வெட்டி திறந்து வைக்க செய்தார். பின்னர் மக்கள் ஒவ்வொருவராக குத்து விளக்கேற்றவும் வைத்து அவர்களை இன்ப அதிர்ச்சியடைய வைத்தார். அப்போது மக்களிடம் பேசிய அவர் தமிழக முதல்வர் கேட்டதெல்லாம் செய்து கொடுத்து விட்டார். நடிகரெல்லாம் நம்பாதிங்க, உதயசூரியன மறந்துடாதிங்க என்று பெண்களிடம் கூறினார். இந்நிகழ்வுகளில் அந்தந்த பகுதி பொதுமக்கள் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.