ஓரினச் சேர்க்கைக்கு இணங்காத இளைஞரை தாக்கிய 5 பேர் கைது

0 436
Stalin trichy visit

திருச்சி, டிச. 18  திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருங்களூர் ஊராட்சி்யில்
குடிசைமாற்று வாரியத்தில் உள்ள ஒரு வீட்டில் ஓரினச் சேர்க்கைக்கு இணங்காத இளைஞர் ஒருவரை போதையில் பயங்கர ஆயுதங்களால் இளைஞர்கள் சேர்ந்து தாக்கும் வீடியோ வெளியான நிலையில் சமயபுரம் போலீசார் 5 இளைஞர்களை கைது செய்தனர். போலீசாரின் பிடியில் இருந்து தப்பிச்சென்ற இருவர் மோட்டார் பைக்கில் இருந்து தவறி விழுந்ததில் இருவரின் கால்கள் முறிந்தது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 24 வயதான இளைஞர் இவர் திருச்சியில் தங்கி வேலைத்தேடி வந்துள்ளார். இந்நிலையில் இவரது நண்பரின் தம்பி திருச்சியில் நடந்த சாலை விபத்தில் காயமடைந்து இருங்களூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்த்து உடல் நலம் விசாரிப்பதற்காக அந்த 24 வயது இளைஞர் அந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.பின்னர் அவரைப் பார்த்துவிட்டு திருச்சி செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்து அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நான் திருச்சிதான் செல்கிறேன் உங்களை அங்கு இறக்கி விடுகிறேன் என கூறி மோட்டார் பைக்கில் ஏற்றிக்கொண்டு சென்றார் இந்நிலையில் இருங்களூரில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் தனது வீடு இருப்பதாகவும் அங்கு சென்று பின்னர் திருச்சி செல்லாம் என கூறி அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்த வீட்டிற்குள் சென்று கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு உள்ளே இருந்த நான்கு பேரை தனது நண்பர்கள் என அறிமுகப்படுத்தி உள்ளார். அதன் பிறகு அனைரும் சேர்ந்து அந்த வாலிபரை ஓரினச்சேர்க்கைக்கு ஈடுபட வற்புறுத்தி உள்ளனர். இதற்கு மறுத்த இளைஞரை போதையில் இருந்த அந்த நபர்கள் அறிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியும் பட்டா கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். உயிருக்கு பயந்த இளைஞர் என்னை விட்டு விடுங்கள் என கெஞ்சியும் அவர்கள் தொடர்ந்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபட அதிகாலை வரை இளைஞரை துன்புறுத்தி கொடுமைபடுத்தி வந்துள்ளனர் .தொடர்ந்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு இதை யாரிடமும் சொல்லக்கூடாது சொன்னால் கொலை செய்து விடுவோம் எனக் கூறி மோட்டார் பைக்கில் ஏற்றிக்கொண்டு மெயின் ரோட்டில் இறக்கிவிட்டு சென்றுவிட்டனர்.இதை தொடர்ந்து அந்த இளைஞர் அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் இருந்த நபர்களிடம் செல்போனை வாங்கிய இளைஞர் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொலைபேசி எண்ணுக்கு புகார் தெரிவித்ததின் பேரில், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் லால்குடி காவல் துணை கண்காணிப்பாளர் அஜய் தங்கம் தலைமையிலான போலீசார் விசாரணை செய்தனர்.

மேலும் விசாரணையில் இவர்கள் இருங்களூர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் ஒரு வீட்டில் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து வந்து அங்கு வாள் மற்றும் அறிவாளால் அடித்ததும் தெரிய வந்ததை அடுத்து சமயபுரம் போலீசார் அங்கு சென்று அவர்களை சுற்றி்வளைத்து கைது செய்ய முயன்ற போது துவாக்குடியைச் சேர்ந்த ரவிபோஸ்கோ (25) ,திருவெரும்பூர் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் (24) ஆகிய இருவர் மோட்டார் பைக்கில் தப்பி சென்றனர். அவர்களை போலீசார் துரத்திச் சென்ற போது இருங்களூர் கைகாட்டியில் மோட்டார் பைக்கிலிருந்து சறுக்கி கீழே விழுந்ததில் இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டது. பின்னர் அவர்களை மீட்ட சமயபுரம் போலீசார் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விசாரணையில் அவர்களது நணபர்களான கவியரசன் (19), யுவராஜ்(24) மற்றும் மேல கொண்டையம்பேட்டையைச் சேர்ந்த  அய்யனார் (24) ஆகியோர் என தெரிய வந்தது. பின்னர் அவர்கள் மீது வழக்கு செய்த சமயபுரம் போலீசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வாள் மற்றும் அறிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் இளைஞரை தாக்கிய வீடியோ வெளியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.