சட்டவிரோதமாக கஞ்சா விற்க முயன்றவர் கைது

0 488

திருச்சி, டிச. 18  திருச்சி மாவட்டம், தா.பேட்டை அடுத்த ஜெம்புநாதபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி கிருஷ்ணன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொத்தம்பட்டி அருகே பெத்துப்பட்டி பிரிவு சாலையில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட கஞ்சாவை வைத்து விற்க முயன்ற கீரம்பூர் பகுதியை சேர்ந்த சிங்கப்பெருமாள் (54) என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 90 கிராம் கஞ்சா, ரூ 2,415 பணம், செல்போன் மற்றும் பைக் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்து வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.