மணப்பாறை அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது

0 238
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 9  மணப்பாறை பகுதிகளிலுள்ள அரசு மதுபான பார்கள் அருகே அரசு அனுமதி இல்லாமல் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்ற 5 பேர் கைது, 450 மது பாட்டில்கள், ரூ 15390 பறிமுதல், முசிறி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் கதிரவன் நடவடிக்கை..

திருச்சி மாவட்டம், முசிறி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கோட்டத்திற்குட்பட்ட மணப்பாறை மாநில நெடுஞ்சாலை பகுதிகளிலுள்ள அரசு மதுபான பார்கள் அருகில்
12 மணி முன்பாக அரசு அனுமதி இல்லாமல் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பதாக திருச்சி காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினத்திற்கு கிடைத்த தகவலை தொடர்ந்து அவர் உத்தரவின் பெயரில் முசிறி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் கதிரவன் தலைமையில் போலீசார் அரசு அனுமதி இல்லாமல் கள்ளத்தனமாக 5 இடங்களில் மது பாட்டில்கள் விற்ற குமார், விக்னேஸ்வரன், சரவணகுமார், பழனிச்சாமி, மோகன்ராஜ் ஆகிய ஐந்து நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 450 டாஸ்மாக் மது பாட்டில்களையும், ரூபாய் 15 ஆயிரத்து 390 பறிமுதல் செய்து கைது செய்த ஐந்து நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மதுபான பார்கள் அருகே காலை 12 மணிக்கு முன்பாக மது பாட்டில்கள் பெற்று கைது செய்த சம்பவம் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.