துவாக்குடியில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

0 101
Stalin trichy visit

திருச்சி, ஜன.19  திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி செடிமலை முருகன் கோவில் தெரு பகுதியில் சிலர் பணம் வைத்து வெட்டு சீட்டாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக துவாக்குடி சப்இன்ஸ்பெக்டர் நாகராஜனுக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் நாகராஜன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட பொழுது துவாக்குடி தெற்கு மலை பகுதியில் பணம் வைத்து வெட்டு சீட்டாட்டத்தில் ஈடுப்பட்ட துவா குடி தெற்கு மலையை சேர்ந்த மதிவாணன் (39), முருகன் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் (40). அதே பகுதியை சேர்ந்த ராஜீவ் காந்தி (45), பழனி (45),
திருவேங்கட நகர் பகுதியை சேர்ந்த சேதுராமன் (40) ஆகிய ஐந்து பேரை கைது செய்ததோடு 52 சீட்டுகள் கொண்ட மூன்று பண்டல்களையும் ரூ 1800 ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.