விவசாயி கொலை வழக்கில் 6 பேர் கைது

0 358
Stalin trichy visit

திருச்சி, ஏப். 29 திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் தாலுக்கா அழகரை ஊராட்சிக்குட்பட்ட கல்லுப்பட்டியில் கடந்த 25ஆம் தேதி ஏழு பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் வீண் தகராறு செய்து மூன்று பேரை கத்தியால் குத்தியது.இதில் அதே ஊரைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணியன் என்பவர் இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.சம்பவத்தின் போது படுகாயம் அடைந்த சேலம் மற்றும் நாமக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குமார் என்பவர் இன்று சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு பேரை தொட்டியம் போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் ஒருவரை தேடி வரும் நிலையில் கத்தி குத்து சம்பவத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.