சூரியூர் ஜல்லிக்கட்டு மைதானத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆய்வு
திருச்சி, ஜன.13 சூரியூர் ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பார்வையட்டு ஆய்வு செய்தார்.
திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் தை 2 ஆம் தேதி மாட்டுப் பொங்கல் அன்று சூரியூர் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக நடத்தப்படுவது வழக்கம். இதில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 750 ஜல்லிக்கட்டு காளைகளும் 550 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள் கின்றனர்.
விமர்சையாக நடைபெற்று வருகின்ற ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு நிரந்தர மைதானம் கேட்ட கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று சூரியூர் பகுதியில் ரூ. 3 கோடியில் பணிகள் நிறைவு தருவாய் எட்டியுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தின் நடைபெற்று வரும் இறுதி கட்ட கட்டுமான பணிகளை பார்வையிட்டு விழாவிற்கான ஆயத்த வேலைகளை விரைவுப்படுத்த கேட்டுக்கொண்டு ஆலோசனைகளை வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
இந்நிகழ்வின் போது ஒன்றிய கழகச் செயலாளர்கள் கங்காதரன் கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.