திருச்சி மாவட்டத்தில் 85.44 சதவீதம் வாக்குப்பதிவு
திருச்சி, ஏப்.24 திருச்சி மாவட்டத்தில் 85.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.
9 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்கு சதவீதங்களின் விவரம் வருமாறு:
மணப்பாறை : மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் மொத்தமாக 2 லட்சத்து 38 ஆயிரத்து 10 பேர் வாக்களித்துள்ளனர். இது 88.81 சதவீதமாகும் ஆகும்.
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 52 ஆயிரத்து 440 பேர் வாக்கு செலுத்தியுள்ளனர். இது 87.95 சதவீதமாகும்.
திருச்சி மேற்கு : திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதியில் மொத்தமாக ஒரு லட்சத்து 94 ஆயிரத்து இது 361 பேர் வாக்கு செலுத் தியுள்ளனர். இது 81.35 சதவீதமாகும்
திருச்சி கிழக்கு : திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 80 ஆயிரத்து 50 பேர் வாக்கு செலுத்தியுள்ளனர். 81.77 சதவீதமாகும்
திருவெறும்பூர்: திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி யில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 777 பேர் வாக்கு செலுத்தி உள்ளனர். இது 81.21 சதவீதமாகும்
லால்குடி: லால்குடி சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 554 பேர் வாக்கு செலுத்தியுள்ளனர் இது 86.51 சதவீதமாகும்
மணச்சநல்லூர் : மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 2 லட்சத்து 7 ஆயிரத்து 292 பேர் வாக்கு செலுத்தியுள்ளனர். இது 87.65 சதவீதமாகும்.
முசிறி: முசிறி சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 714 பேர் வாக்கு செலுத்தியுள் ளனர். இது 86.78 சதவீதமாகும்.
துறையூர்: துறையூர் சட்டமன்ற தொகு தியில் ஒரு லட்சத்தை 82 ஆயிரத்து 285 பேர் வாக்கு செலுத்தியுள்ளனர். இது 86.52சதவீதமாகும்.
மொத்த மாக திருச்சி மாவட்டத் தில் 18 லட்சத்து 34 ஆயிரத்து 485 பேர் வாக்கு செலுத்தியுள்ளனர். அதன் வாயிலாக திருச்சி மாவட் டத்தின் வாக்கு சதவீதம் 85.44 சதவீதமாகும்.
வாக்கு எண்ணிக்கை மய்யத்துக்கு அனுப்பி வைப்பு : வாக்களிக்கும் நேரம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலை யில் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படையினர், வாக்குசாவடி தலைமை அலுவலர்கள், வாக்குசாவடி அலுவலர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதற்குரிய பெட்டியில் சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கும் பாதுகாப்புடன் வண்டிகளில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, மணப்பாறை, சிறீரங்கம், திருவெறும்யூர் தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி ஜமால் முகமது கல்லூரிக்கும். லால்குடி, துறையூர், மணச்சநல்லூர், முசிறி தொகுதியில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் துறையூர் ஒயாசிஸ் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்திற்கும் அனுப்பி வைத்தனர்.
மூன்றடுக்கு பாதுகாப்பு:
இந்த இரண்டு மய்யங்களிலும் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் இவற்றை அடுக்கு வைக்கும் பணியானது இரவு தொடங்கி அதிகாலை வரை நடைபெற்றது. பணி முடிந்த பின்னர் அந்த அறைகள் அந்தந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை மய்யங்களில் மூன்றடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வரும் மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.