திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் ஹான்ஸ் மற்றும் புகையிலைப் பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது அவர்களிடமிருந்து
86 கிலோ ஹான்ஸ் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் அல்லிதுறையை சேர்ந்த பிரபு(வயது 42), வினோத்குமார்(வயது 38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.