திருச்சி ரெயில் நிலையத்தில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் மூதாட்டி கால் இருந்ததால் பரபரப்பு

0 280
Stalin trichy visit

திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் மதுரையில் இருந்து சென்னை வரை செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் 5-வது பிளாட்பாரத்தில் வந்தது. அப்போது அங்க ரோந்து பணியில் இருந்த ரெயில்வே போலீசார். தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் துண்டான கால் ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து என்ஜின் டிரைவரிடம் கேட்டபோது அவரும் அதிர்ச்சியில் உறைந்தார். எப்படி நடந்தது என்று தெரியவில்லை என்று கூறினார். உடனே ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அவர்கள் 5-வது பிளாட்பாரத்திற்கு வந்து அந்த கால் பகுதியை மீட்டனர். பின்னர் இது குறித்து போலீசார் திருச்சியில் இருந்து மணப்பாறை வரை உள்ள அனைத்து ரெயில்வே கேட் பகுதியிலும் விசாரணை நடத்தினர். அப்போது இனாம்குளத்தூர் ஆலம்பட்டி பகுதியில் உள்ள ஒரு ரெயில்வே கேட்டில் ஒரு மூதாட்டி ரெயிலில் அடிபட்டு இறந்ததாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். அப்போது அந்த மூதாட்டியில் உறவினர்கள் அவரது உடலை எரியூட்ட சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர். அப்போது எஸ்.பி.சி.ஐ.டி. போலீஸ் ஏட்டு தொல்காப்பியம் அதிரடியாக சென்று சுடுகாட்டில் இருந்த மூதாட்டியின் உடலை மீட்டு அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் இதுகுறித்து விசாரித்த போது சுப்பம்மாள் முத்து(வயது 62). இவர் அந்த பகுதியில் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று மாலை இனாம்குளத்தூர் ஆலம்பட்டி அருகே உள்ள ரெயில்வே கேட்டில் அவர் ஆடு மேய்த்து கொண்டிருக்கும் போது ஒரு ஆடு ரெயிலில் அடிபட சென்றது அதனை காப்பாற்ற அவர் சென்றார்.

அப்போது சுப்பம்மாள் முத்து ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். அப்போது தான் அவரது இடது கால் ரெயில் என்ஜினில் அடிபட்டு துண்டானது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் ஏட்டு ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜான்சன் மற்றும் கேசவன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.