இலங்கை தமிழர்கள் 2வது நாள் உண்ணாவிரதம்!

0 290
Stalin trichy visit

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையில் இலங்கை தமிழர்கள், வங்கதேசம், கென்யா, ரஷ்யா, சூடான், நைஜீரியா, ஐவரிகோஸ்ட் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த 160 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். முகாம் சிறையில் உள்ளவர்கள் போலி பாஸ்போர்ட் மற்றும் சட்டவிரோதமாக தங்கி இருத்தல் உள்ளிட்ட வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டவர்கள்.

 

மேலும், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற வழக்குகளில் சிக்குபவர்கள் திருச்சியில் உள்ள முகாம் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு தங்களை விடுவித்து தங்கள் மீதான வழக்குகளை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முகாம் சிறையில், இலங்கை தமிழர்கள் 10 பேர் 2வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.