உக்ரைன் நாட்டில் சிக்கித்தவிக்கும் மகனை மீட்டுத் தரக்கோரி பெற்றோர்கள் கோரிக்கை!

0 423
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கீழ முல்லைக்குடியை சேர்ந்தவர் சக்திவேல் ஜோதிலட்சுமி தம்பதிகள் இவர்கள் விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர் இந்த நிலையில் இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.  இதில் கடைசி மகனான அஜித்(23). உக்ரைன் நாட்டில் உள்ள டெர்னாபெல்  ஹாஸ்டலில் தங்கி பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் இடையே போர் மூண்டதை தொடர்ந்து பதட்டம் ஏற்பட்டுள்ளது .இதில் சிக்கி தவிக்கும் தனது மகனை மட்டும் அல்லாது அவருடன் சேர்ந்து படிக்க கூடிய அனைத்து மாணவர்களையும் மீட்டு இந்தியாவிற்கு  அழைத்து வர மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அஜித்தின் பெற்றோர் பேட்டி அளித்தனர்.

அதில் தனது மகன் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பேசும்போது அங்கு உள்ள போர் நிலவரம் குறித்து பேசினான். நேற்று முன்தினம் பேசுகையில் மிகுந்த பதட்டத்துடன் பேசியதோடு ஆங்காங்கே குண்டு வெடித்து வருவதாகவும் ஹாஸ்டலை விட்டு வெளியேற முடியாத சூழலில் உள்ளதாகவும்  அஜித் கூறியதாக பெற்றோர் தெரிவித்தனர்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விமான டிக்கெட் 60 ஆயிரம் ரூபாய் என்றிருந்த நிலையில் தற்போது ஒரு லட்சம் கேட்பதாகவும்அவ்வளவு வசதியை தங்கள் இடம் இல்லை என்றும் அதனால் தனது மகன் அஜித்தை மட்டுமல்லாது இந்தியாவிலிருந்து சென்றுள்ள மாணவர்கள் அனைவரையும் மீட்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அத்தோடு தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.